தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை.!
நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை உயர் நீதிமன்றம் விதித்த விதி முறைகளை கடைப் பிடிக்கவில்லை என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு தடை விதித்தது.
இதனால், கடந்த சனிக்கிழமை மீண்டும்தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.109.3 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மதுரையில் ரூ.28.6 கோடி, திருச்சியில் ரூ.26.4 கோடி, சேலத்தில் ரூ.24.3 கோடி, கோவையில் ரூ.22.5 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.6.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.