108 விளக்கேற்றி சுர்ஜித் பெயரை மலர்கள் கொண்டு அலங்கரித்து பிரார்த்தனை ..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு விழுந்தான்.
சுர்ஜித் தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணியில் தொடர்ந்து 49 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சிறுவனின் உயிரை காப்பாற்ற ஆழ்துளை கிணற்றின் அருகில் 100 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
முதலில் வந்த முதலில் ரிக் இயந்திரத்தை மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சுர்ஜித் மீண்டுவர தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 108 விளக்குகள் ஏற்றி சுர்ஜித் பெயரை மலர்களால் சிறப்பு வழிபாடு செய்தனர்