வென்டிலேட்டர்’ உள்ளிட்ட அதிநவீன அவசர சிகிச்சை கருவி வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி வாகனங்கள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.
நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற வசதியாக, நவீன வசதிகளுடன் கூடிய அவசரஊர்தி வாகனங்களை, தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தில் ‘வென்டிலேட்டர்’, ஆக்ஸிஜன் சிலிண்டர், இருதய இயக்கத்தை துாண்டும் நவீன கருவி, உயிர்காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கி உயிர்காக்கும் கருவி, கூடுதல் மருத்துவ வசதியுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்துக்கு, இரண்டு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் விஜய கார்த்திகேயன், இரு ஆம்புலன்ஸ்களையும், மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். முன்னதாக, அவர், கூடுதல் மருத்துவ வசதிகள் குறித்து, வாகனத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ‘டீன்’ வள்ளி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி, 108 ஆம்புலன்ஸ் இயக்கும் நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…