சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் மணமக்களுக்கு 4 கிராம் தங்கம், வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், ஸ்டவ், பாய், தலையணை, போர்வை, பெட்டி, உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், 2020-2021ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 795 பேருக்கு, 415 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…