சென்னை வந்து பணிபுரிந்த வெளி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் அனைத்து மக்களும் வெளியே செல்லவே அச்சத்தில் இருக்கிறார்கள் , இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். குறிப்பாக இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அடங்குவார்கள்
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை 21 நாட்கள் மட்டும் பணிசெய்தால் போதும், 6 நாட்கள் விடுமுறை எனக் கூறி அழைத்து வந்து விட்டு தேவையான உணவு மற்றும் முறையான ஊதியம் ஓய்வு வழங்கப்படாமல் பணிபுரிய கட்டாயபடுத்துவதாக, குற்றம்சாட்டி தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளரகள் மூன்று தினங்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் , என கூறி போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் கலைத்தனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…