108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்..!

Default Image

சென்னை வந்து பணிபுரிந்த வெளி மாவட்ட  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் அனைத்து மக்களும் வெளியே செல்லவே அச்சத்தில் இருக்கிறார்கள் , இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.  குறிப்பாக இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அடங்குவார்கள்

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை 21 நாட்கள் மட்டும் பணிசெய்தால் போதும், 6 நாட்கள் விடுமுறை எனக் கூறி அழைத்து வந்து விட்டு தேவையான உணவு மற்றும் முறையான ஊதியம் ஓய்வு வழங்கப்படாமல் பணிபுரிய கட்டாயபடுத்துவதாக, குற்றம்சாட்டி தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளரகள் மூன்று தினங்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் , என கூறி போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் கலைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்