கவலை வேண்டாம் !இரண்டு மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் வரும் பாதை தெரியும் -அமைச்சர் விஜயபாஸ்கர்
108 ஆம்புலன்ஸ் வரும் பாதையை தெரியும் வகையில் 2 மாதத்தில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.அப்பொழுது பேரவையில்,திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசினார்.அவர் பேசுகையில்,108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வர 1 மணி நேரத்திற்கு மேலாகிறது என்று பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், சர்வதேச நாடுகளை விட தமிழகத்தில் விரைவாக ஆம்புலன்ஸ் வருகிறது.குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் 8 நிமிடங்களுக்குள்ளும்,கிராம பகுதிகளில் 13 நிமிடங்களுக்கும்,மலைப் பகுதிகளுக்கு 13 நிமிடங்களில் வருகிறது என்று தெரிவித்தார்.இன்னும் இரண்டு மாதத்தில் ,ஆம்புலன்ஸை அழைத்தவுடன் வாகனம் வரும் பாதை ,ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.