108 புதிய அறிவிப்புகள் சுகாரத்துறையில் வெளியீடு! அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
Venu

தமிழ்நாடு சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நான்காண்டுகால மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலன் கருதி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்எல்ஏ செந்தில்குமார், மகப்பேற்றின் போது, கர்ப்பிணிகள் இறப்புத் தொடர்பான எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கும்பகோணம் ஆகிய நகரங்களில், 28 புள்ளி 3 கோடி ரூபாய் செலவில், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார். அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், சூளகிரி ஆகிய இடங்களில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.  காசநோயாளிகள் சிகிச்சை காலம் முழுவதும் மாத்திரை உட்கொள்வதை கண்காணிக்க, “99 Dots Sleeves” என்ற செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உணவில் கலப்படம் இருப்பதை கண்டறிய மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நான்காண்டுகால மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என்றும், மருத்துவக் கல்வி மாணவர்களின் சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலன் கருதி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை செய்யப்படும் என்பன உள்ளிட்ட 108 அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

24 minutes ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

42 minutes ago

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

4 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

4 hours ago