108 புதிய அறிவிப்புகள் சுகாரத்துறையில் வெளியீடு! அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாடு சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நான்காண்டுகால மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலன் கருதி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்எல்ஏ செந்தில்குமார், மகப்பேற்றின் போது, கர்ப்பிணிகள் இறப்புத் தொடர்பான எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கும்பகோணம் ஆகிய நகரங்களில், 28 புள்ளி 3 கோடி ரூபாய் செலவில், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார். அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், சூளகிரி ஆகிய இடங்களில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். காசநோயாளிகள் சிகிச்சை காலம் முழுவதும் மாத்திரை உட்கொள்வதை கண்காணிக்க, “99 Dots Sleeves” என்ற செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உணவில் கலப்படம் இருப்பதை கண்டறிய மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நான்காண்டுகால மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என்றும், மருத்துவக் கல்வி மாணவர்களின் சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலன் கருதி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை செய்யப்படும் என்பன உள்ளிட்ட 108 அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.