தமிழ்நாட்டில் நேற்று 1604 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள். இன்று திருநெல்வேலியில் 107 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது பரவி வரும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்க தமிழகஅரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ‘ இன்று திருநெல்வேலியில் மொத்தமாக 107 காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 1604 முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
3 பேருக்கு மேல் ஒரு பகுதியில் காய்ச்சல் இருந்தால் அந்த பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல் மட்டுமே.
தமிழகத்தில், எச்1என்1 வைரஸால் பாதிக்கப்பட்டோர் 442பேர். அவர்களில் 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் வீடுகளில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கின்றார்.
இந்த காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்கள் வீட்டில் இருந்தாலே போதுமானது. இருமல் , தும்மல் ஆகியவற்றால் பரவும் என்பதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஜனவரி முதல் நெ 6 பேருக்கு எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்துள்ளது.
நாங்குநேரி சாலையில் 10கோடி செலவில், பிரதான சாலையில் சாலை விபத்துக்கான சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு முதற்கட்டமாக இடம் பார்க்கப்பட்டுள்ளது’ என தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகல் இருக்கிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தில் இருக்கிறது. முதலில் மத்திய அரசு கவுன்சிலிங் முடிந்ததும். மாநில அரசுக்கான கவுன்சலிங் ஆரம்பிக்கப்படும்.’ எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…