சென்னை வேளச்சேரியில் கொரோனா கேர் மையத்தில் ஆய்வு செய்தபின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா பாதிப்பு 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கொரோனா தொற்று விகிதாச்சாரத்தில் இறக்கும் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விரைவில் கொரோனா ஒரு முடிவுக்கு வரும், கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழு ஊரடங்கால் 15 நாள்களில் தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து 18,000 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 1,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையாக 35 ஆயிரம் கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதில் இதுவரை 3,060 தந்திருக்கிறார்கள். 30,000 மருந்து வேண்டும் என்று தமிழக முதல்வர் கூட மத்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
ஆனால் வந்திருப்பது 3,060 இதை கொண்டு நோயின் தன்மைக்கு ஏற்ப இந்த மருந்துகள் பிரித்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கைகளில் விளைவால் தமிழகத்தில் இருக்கிற அனைத்து மாவட்ட அரசுப் பொது மருத்துவமனைகளிலும், கருப்பு பூஞ்சைக்கான சிறப்பு வார்டுகளும், தீவிர நோய் சிகிச்சை பிரிவுகளில் ஒரு சிறிய வாடும் இதற்கென நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நேற்று கூட ஸ்டான்லி மருத்துவமனையில் திறந்துவைத்தோம். கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், அதற்கு 2 நாட்களுக்கு முன்னாள் ஓமந்தூரார் பொது மருத்துவமனையிலும் பிரத்தேக வார்டுகள் திறந்து வைத்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதிலும் இதற்கான ஏற்பாடு இருக்கிறது எனவே தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…