மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா.!
தஞ்சை பெரியகோவிலில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) அதாவது ஒரு நாள் மட்டும் நடக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.
இது, குறித்து மேலும் கூறிய அவர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சதய விழா நடைபெற வேண்டும் என்றும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும், விழாவிற்கு வருகை தரும் அனைவரும் முககவசம் அணிவதும்,சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும், தற்காலிக மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூறியுள்ளார்.