ரூ.45 கோடி மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயம்., சிபிஐ-யை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு.!

Default Image

தனியார் நிறுவனமிடம் இருந்து சிபிஐ-யால் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தில், 103 கிலோ தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள 72 லாக்கரில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. அதற்கான சாவிகளை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவின்பேரில், அந்த லாக்கர் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.

சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் ரூ.45 கோடி மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உயர் அதிகாரி தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் சென்னை உய்ரநீதிமன்றம் கடந்த 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே, சி.பி.ஐ. சார்பில் நடத்தப்படும் உள்மட்ட விசாரணையில் அதிகாரிகள் மீது தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின்கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்குப்பதிவு செய்ய முடியாது. உள்ளூர் போலீசால் மட்டுமே திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும். இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செய்லபடும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்