தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் 10,260 காலிப்பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு.
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் 10,260 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 10,260 காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 200 பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.