மாணவர்களே!சற்று நேரத்தில்…10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – லிங்க் இதோ!
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20 ஆம் தேதி) வெளியீடு.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 31 இல் நிறைவடைந்தது.அதன்பின்,தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது.அதே சமயம்,தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.5 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.3 லட்சம் மாணவர்களும் எழுதியிருந்த நிலையில்,தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20-ம் தேதி) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.அதன்படி,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை (S.S.L.C) இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார்.
இதற்கிடையில்,இன்று காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள,அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஜூன் 9-ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,. அதற்கு முன்பாகவே 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.