ரூ.100 பணம் கொடுத்து உறுப்பினர் ஆகவில்லையே செய்தி தொடர்பாளர் குஷ்பூ…பகீர் குற்றசாட்டு…!
சென்னை காமராஜ் அரங்கத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி நடந்துகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்
இதற்கிடையில் நடிகை குஷ்பூ இதுவரை உறுப்பினருக்கான அடையாள அட்டையை கூட பெற வில்லை.அதற்காக வசூல் செய்யப்படும் ரூ.100 ஐயும் குஷ்பூ செலுத்தவில்லை என கராத்தே தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், குஷ்பூ இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது
இந்நிலையில்,இவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குஷ்பூ விழாவிற்கு வருகை புரிவார் என்றும், இளங்கோவன் தலைவராக இருந்த போதே, உறுப்பினர் அட்டையை குஷ்பூ பெற்றுவிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்
இதன் காரணமாக விழா கூட்டத்தில் சற்று சர்ச்சை நிலவி வருகிறது.பொதுக்குழு உறுப்பினருக்கான கட்டணத்தை கூட கட்டாத குஷ்பூவின் பெயர், எப்படி பட்டியலில் இடம் பெற்றது என்ற கேள்வி தான் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது