MKstalin: 1000வது கோயில் குடமுழுக்கு விழா: முதலவர் ஸ்டாலின் பெருமிதம்!

mk stalin sekar babu

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக இன்று நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் 1000வது குடமுழுக்கு விழா இதுவாகும்.

இந்நிலையில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து அறநிலைத்துறை செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலவர் ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் சராசரியாக தினம் ஒரு கோயிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இதற்குக் காரணமான அமைச்சர் சேகர்பாபு அவர்களையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்