10000000 பேர் வேலை இழப்பு …!1,400 பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்…!உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடல் என்று உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நாடு முழுவதும் இந்தாண்டு பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது.இதனால் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது.
இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,இந்த தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதேபோல் பட்டாசுகள் தேங்கியும் இருக்கின்றது.ஆலைகள் மூடப்படுவதால் 1 கோடி பேர் வேலை இழப்பார்கள்.பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்று கிடையாது.எனவே சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறது.இதனால் சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.