மு.க.அழகிரியின் தேக்கநிலை அவருக்கு தெரியுமா என்றே தெரியவில்லை என்று அவரது ஆதரவாளார்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின் நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.பின்னர் மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டார் .அப்போது அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.மேலும் திமுக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப 5-ம் தேதி பேரணி என்றும் தெரிவித்தார்.
இதேபோல் நேற்றும் மதுரையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதேநேரம், ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். வெளியூர்களில் இருந்து ஆதர வாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந் ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில்,மு.க.அழகிரி எதிர்பார்த்தவாறு திமுகவின் தற்போதைய நிர்வாகிகள் உட்பட முக்கியமானோர் யாரும் வரவில்லை.மு.க.அழகிரியிடம் சென்னை பேரணி குறித்து கட்சியினர் உறுதி அளிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.ஆனால் திட்டத்தின்படி வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வருவார்களா? அழைத்து வரக் கூடியவர்கள் யாராக இருப்பார்கள்? அவர்களின் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளை யார் செய்வது? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் பலரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஏற்பாடுகளில் உள்ள தேக்கநிலை அழகிரிக்கு தெரியுமா என்றே தெரியவில்லை.
DINASUVADU
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…