1,00,000 பேருடன் மு.க.அழகிரி பேரணி …!பாதுகாப்புக்கு 2,000 காவலர்கள் குவிப்பு …!
மு.க.அழகிரி பேரணியையொட்டி பாதுகாப்புக்கு 2,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் முன்னால் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் அவருடைய ஆளுமையை உயர்த்தி திமுக தலைவராக பதவியேற்றார்.
ஆனால் முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் என்றும் அவருடைய ஆதரவாளர்களை வைத்து தீட்டிமிட்டு வந்தார்.
ஆனால் முக.ஸ்டாலின் திமுக தலைவரானதும் ஒட்டு மொத்த திமுக தொண்டர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.நம்முடைய பலம் வெகுவாக குறைந்துள்ளது என்பதை உணர்ந்த முக.அழகிரி பின்னர் என்னையும் திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினார்.
மேலும் கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பலர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறினார் .
மீண்டும் மதுரையில் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி மீண்டும் கருத்து ஒன்றை கூறினார் .அவர் கூறுகையில்,நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் .மேலும்
சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர்க்கு மேல் வருவார்கள் என்றும் உறுதியுடன் கூறினார்.
பின்னர் இன்று (செப்டம்பர் 5 ஆம் தேதி) நடைபெற உள்ள பேரணி குறித்து மு.க.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில் நேற்று மு.க. அழகிரி மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், நான் ஏற்கெனவே கூறியது போல, ஒரு லட்சத்துக்கும் அதிக மானோர் கலந்துகொள்வார்கள்.மேலும் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க எண்ணம் எதுவும் இல்லை.மேலும் செய்தியாளர்களை 5-ம் தேதி (இன்று ) சந்திக்கிறேன். அப்போது என் முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மு.க.அழகிரி சார்பில் கருணாநிதி நினைவு அமைதிப் பேரணி நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்புக்கு 2,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.