பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!

Default Image

வெற்றிகரமாக இந்திய பி.பி.ஓ வளர்ச்சி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருவதால், கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய BPO வளர்ச்சி திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், இரண்டாம் கட்ட பெரு நகரங்களை மையமாக கொண்டு மத்திய அரசு இந்திய பி.பி.ஓ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகவும், தமிழகத்தில் இந்த திட்டத்தின் வெற்றி விகிதம் 93% சதவீதம் ஆக உள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் 2ம் மற்றும் 3ம் கட்டமாக 13 நகரங்களில் 51 பி.பி.ஓக்களை மத்திய அரசு அமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 2ம் கட்ட பெருநகரங்களை மையமாக கொண்டு மத்திய அரசு இந்திய பி.பி.ஓ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய பி.பி.ஓ திட்டத்தால் தமிழகத்தில் நேரடியாக 8,387 நபர்களுக்கும், மறைமுகமாக 16,477 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் தமிழகத்திற்கு இந்திய பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் வெற்றிகரமாக பி.பி ஓ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருவதால் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்