நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 10,000 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்…!
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ்.எம்.வைத்யா தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ்.எம்.வைத்யா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் களும், அடுத்த ஒரு வருடத்தில் 2000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், இரண்டு வருடங்களில் 8000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், மூன்று வருடங்களில் பத்தாயிரம் சர்ஜிங் ஸ்டேஷன்களும் படிப்படியாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் மூலம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை வைத்து இருக்கக்கூடியவர்கள் எந்தவித அச்சமுமின்றி தொலை தூரங்களுக்கு பயணிக்க முடியும் என்றும், ஒட்டுமொத்தத்தில் நாட்டில் கார்பன் வெளியேற்றம் என்பது மிகப்பெரிய அளவில் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.