பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய அடுத்த கல்வியாண்டில் 1000 வாகனங்கள்…! அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 100 வாகனங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.15 நாட்களில் முதலமைச்சர் முதல் வாகனத்தை தொடங்கிவைப்பார், அடுத்த கல்வியாண்டில் 1000 வாகனங்கள் உருவாக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இதுவரை 172 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் சீருடை போல அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.