இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால பல்வேறு சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் உட்பட தலா ரூ.1000 வழங்கப்படும் என பல்வேறு சலுகைகள் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பணம் பெறுவதற்கு நியாயவிலை கடைகளில் கூட்டம் கூடுவதால் சமூக விலகல் பாதிக்கப்படும் என்று டோக்கன் வழங்கும் போதே கொரோனா நிவாரணத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த மாதம் இறுதி வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…