வணிக வரித்துறையில் ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!

Default Image

வணிக வரித்துறையின் 1,000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

வணிக வரித்துறையின் 1,000 அலுவலர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்ததன்படி, உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கும் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றி வந்தவர்களுக்கு  துணை வணி வரி அலுவலர்களாக தரம் உயர்த்தப்படுகின்றனர். இதுபோன்று, பணி மூப்பு அடிப்படையில் உதவியாளர்களாக உள்ளவர்களுக்கு வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வருவாயை பெருக்குவதற்காக வணிக வாரித்துறையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்த்தப்படும் 1,000 பேரில் 160 பேர் வணிகவரி அலுவலர்களாகவும், 840 பேர் துணை வணிகவரி அலுவலர்களாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. பதவி உயர்வு அளிக்கப்படுவதன் காரணமாக 1,000 பெருகும் ஊதியம் உயர்த்தப்படுகிறது என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், புதிய பதவி உயர்வு அளிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.29.92 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்