அடுத்த 100 ஆண்டுகளுக்கும், அதிமுக தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதால், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல், அடுத்த நூறு ஆண்டுகளுக்கும், அதிமுக தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதால், 2 கோடி இளைஞர்களுக்கு, படிப்படியாக வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், திட்டம் அறிவிக்கப்பட்டு, 6 ஆண்டுகளில் இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தான் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றால், மீதமுள்ள 195 லட்சம் பேருக்கு எப்போது வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், 100 கோடி ரூபாய் செலவில் 70 வகையான பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினார். ஒரே ஆண்டில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறவில்லை என்றும், படிப்படியாக தான் பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்திருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.