தென்காசியில் 100 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் என்னும் மூதாட்டி கடும் மூச்சுத் திணறல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுத்த சளி மாதிரியில் கொரோனா நோய்த்தொற்றுகள் இருப்பது காணப்படவில்லை. ஆனால் மூச்சுத்திணறல் தீவிரமாக இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது, அதில் அவர் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து கடந்த 6 நாட்களாக கொரோனா நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசக்கியம்மாள் அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் இசக்கியம்மாளை வாழ்த்தி வீட்டிற்கு வழி அனுப்பு உள்ளனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…