தமிழகத்தில் 15 நாட்களில் 100% தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 15 நாட்களில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 15 நாட்களில் 100% கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் இதுவரை 5.03 கோடி பேர் (64 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
70% தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்த மாதிரியான அலை வந்தாலும் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள் தெரிவித்ததாக கூறினார்.
10 முதல் 15 நாட்களில் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் மிக துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் வாரயிறுதியில் கோவில்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஊரடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுப்பார் எனவும் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025