டெங்கு காய்ச்சலை பரப்பினால் 100 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் – சென்னை மாநகராட்சி.!
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அவற்றை பரப்ப காரணமாக இருக்கும் பெரிய கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. எனவே டெங்கு , மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பதற்பான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள், ஓட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்பவைகளே கொசுக்கள் வளர காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கொசுக்கள் வளர காரணமாக இருக்கும் ஒவ்வொன்றின் உரிமையாளர் மீது தனித்தனியாக அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த பட்டியல் :
குடியிருப்பு வீடுகள் என்றால் முதல் நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு பின்னரே 100 முதல் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள் – ரூ. 500 முதல் 5000 வரை
1000மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளி, கல்லூரிகள் – ரூ. 5000 முதல் 50,000 வரை
1000 மாணவர்களுக்கு மேலுள்ள பள்ளி, கல்லூரிகள் – ரூ. 10,000 முதல் 1 லட்சம் வரை
வணிக வளாகங்கள் – ரூ. 10,000 முதல் 1 லட்சம் வரை
2 நட்சத்திரத்திற்கு கீழுள்ள ஓட்டல்கள் – ரூ. 5,000 முதல் 25,000 வரை
2 நட்சத்திரத்திற்கு மேலுள்ள ஓட்டல்கள் – ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை
ஐந்தாயிரம் அடிக்கு குறைவான கட்டுமான இடங்கள் – ரூ. 10,000 முதல் 50,000வரை
ஐந்தாயிரம் அடிக்கு அதிகமான கட்டுமான இடங்கள்-ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை
50 படுக்கைகளின் கீழுள்ள மருத்துவமனைகள் – ரூ. 25,000 முதல் 1 லட்சம் வரை
50 படுக்கைகளின் மேலுள்ள மருத்துவமனைகள்- ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை