தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் திருடப்பட்ட 100 சவரன் நகை! கைது செய்யப்பட்ட மனைவி! மனமுடைந்த கணவர் தற்கொலை!

Default Image

தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரிய செல்வம் நகரில் உள்ள தூத்துக்குடி துறைமுக ஊழியர் ஆகிய வின்சன்ட் என்பவரின் வீட்டில் அன்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அவரது மனைவி ஜான்சி படுத்திருந்த அறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பக்கத்தில் உள்ள அறையில் இருந்த பீரோவில் 100 சவரன் நகையும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக நேற்று காலை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

 இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நகை எவ்வாறு களவு போனது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இதனையடுத்து வின்சென்ட் மனைவி ஜான்சியிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். 

அப்பொழுது துருவித்துருவி விசாரணை செய்ததில் தனது கணவரின் கஞ்சத்தனத்தால் 100 பவுன் தங்க நகையை தானே தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிடத்தில் புதைத்து வைத்துவிட்டு வீட்டினரை நம்ப வைப்பதற்காக 100 பவுன் நகையும் கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியது ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், வின்சென்ட்டின் மனைவி ஜான்சியே நகைகளை திருடிவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகிய நிலையில், மன உளைச்சலில் இருந்த ஊழியர் வின்சென்ட் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP