JWELL THEFT IN KOVAI GANDHIPURAM [Representative Image]
கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன.
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு இந்த கொள்ளை சம்பவம்கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை துளையிட்டு இந்த கொள்ளை சமபவத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வளவு நகைகள் திருடப்பட்டுள்ளது என்ற தெளிவான விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருந்தும் முதற்கட்ட தகவலின்படி 100 சவரன் அளவில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பரபரப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…