கோவையில் பரபரப்பு.! சுவற்றில் துளையிட்டு 100 சவரன் நகைகள் கொள்ளை.!

JWELL THEFT IN KOVAI GANDHIPURAM

கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு இந்த கொள்ளை சம்பவம்கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை துளையிட்டு இந்த கொள்ளை சமபவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வளவு நகைகள் திருடப்பட்டுள்ளது என்ற தெளிவான விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருந்தும் முதற்கட்ட தகவலின்படி 100 சவரன் அளவில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், பரபரப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu