திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இறக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ரத்து செய்தது.
மேலும், அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், உயர்நீதிமன்றம் கூறியபடி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விதிகளை மீறியதாகவும், அனுமதி வழங்கியதை வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…