வேலைநிறுத்தம் வாபஸ்: கோயம்பேட்டில் இருந்து 100 சதவீத பேருந்துகள் இயக்கம்!

Default Image

பேருந்து போக்குவரத்துக்கு சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது.

ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டாத நிலையில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். தொழிலாளர்கள் நல ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து ஊழியர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தனர்.

மூன்று நாட்களாக நடந்த இந்த வேலைநிறுத்தம், நேற்று வாபஸ் பெறப்பட்ட காரணத்தினால் பணியாளர்கள் வழக்கம்போல தங்களின் பணிக்கு திரும்பினார்கள். இதனால் தமிழகம் முழுவதும் இன்று வழக்கம் போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கத்தொடங்கியது. அந்தவகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை முழுவதும் 480 முதல் 490 பேருந்துகள் வரை இயக்கப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், 427 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தற்பொழுது 100 சதவீத பேருந்துகள் இயங்கதொடங்கியதால், பொதுமக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்