100 புதிய பேருந்துகள் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் 100 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ரூ.37.98 கோடியில் 100 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்லவன் இல்லத்தில் புதிய பேருந்துகளை கொடியசைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.634.99 கோடி மதிப்பில் அரசு போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் புதிதாக 1,666 பி.எஸ்.6 (BS6 ) பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக 100 பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொடியேசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைப்பு..!
அதன் முதற்கட்டமாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும் என மொத்தம் 100 புதிய பி எஸ் 6 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர்போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆகிய கலந்து கொண்டனர்.