மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி மொழி..! செயலி வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை 100% அமல்படுத்துவதை வலியுறுத்தி சென்னையில் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்க குழுவின் கூட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை 100% அமல்படுத்துவதை வலியுறுத்தி செயலி வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 169வது கூட்டம் இன்று (23.03.2023) தெற்கு ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரயில் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்ககளுக்கு எளிதாக புரியும் பிராந்தியமொழிகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் இன்று இந்தி மொழியை ரயில்வே ஊழியர்கள் நடைமுறைபடுத்துவதை வலியுறுத்தி செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை 100% நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி டாக்டர் ஏ. சீனிவாசன் “செயலி மூலம் செயல்படுத்துதல்” என்ற தலைப்பில் டெமோ வழங்கினார். இந்த செயலியில் இந்தி கற்றுக் கொள்வதற்கான வசதிகள், இந்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.