சென்னை முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது! அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

மின்வாரியத்தின் துரித நடவடிக்கை காரணமாக இரவு 2 மணிக்கு 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.

Thangam Thenarasu

சென்னை :  சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் (செப்டம்பர் 12, 2024) இரவு மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மின்சார வாரியம் தரப்பில் இருந்து விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

Read More – திடீர் மின்தடை – ‘இருளில் மூழ்கிய சென்னை’…விளக்கம் கொடுத்த மின்சார வாரியம்!

இந்நிலையில், சென்னையில் ஏற்பட்ட மின்தடை பிரச்சனை முழுவதுமாக 100% சீரமைக்கப்பட்டது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியதாவது,  “மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன்”, எனக் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்