100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் தியாகி குமரனின் 118 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலை பொறுத்தவரையில் மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பாஜக இந்த முறை அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்.
அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார். மத்திய அரசு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கொடுத்ததில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஊழல் நடந்திருக்கிறது. 100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என தெரிவித்தார். சமீபத்தில் பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது அவருக்கு ஆதரவாக சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…