100 நாள் வேலைத்திட்டம் – பின் தங்கிய தமிழகம்..!
மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் பின்தங்கி இருப்பது அம்பலமானது.
நாட்டிலேயே சிறப்பாக 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அசாம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்கள் மத்திய அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக பணிகளை மேற்கொண்டுள்ளன.
2020-21-நிதியாண்டில் மத்திய அரசு அனுமதித்த அளவுக்கு கூட 100 நாள் வேலை திட்டப் பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளவில்லை. நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் உள்ளது.