டிரை ஐஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.!
Food Safety Department : திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது, ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அதன் புகையை தாங்க முடியாமல் கூச்சலிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதிகாரிகளுக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்றும், திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை விற்க கூடாது என்றும், அதனை மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.