செவிலியர் மீது ஆசிட் வீசியவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!
செவிலியர் மீது ஆசிட் வீசிய மணிகண்டன், விஜயகுமார் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது ஆசிட் வீசப்பட்டது. பிரசவத்திற்காக தனது மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மணிகண்டன் என்பவர் அனுமதித்து இருந்தார். பணியிலிருந்த செவிலியர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் மனைவி அனுப்பி வைத்தார்.
திருச்செங்கோட்டில் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தை இறந்ததால் செவிலியர் மீது ஆசிட் வீசப்பட்டது. செவிலியர் மீது ஆசிட் வீசிய இரண்டு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். ஆசிட் வீசிய மணிகண்டன், விஜயகுமார் ஆகியோருக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்தது.