சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டுள்ளனர்.இதை அறிந்த குமார் தப்பி ஒளிந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் மாணவி மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறைந்திருந்த குமாரை பிடித்து,பின்பு போஸ்கோ சட்டத்தின் படி கைது செய்துள்ளனர்.இதன் பின்பு குமாருக்கு உமா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குமார் கைது செய்யப்பட்டது அறிந்த உமா,தனது கணவன் குமார் தன்னை கொலை செய்ய முயன்றததால் தான் தன் தாய் வீட்டிற்கு வந்ததாகவும் இந்த மாதிரி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயல்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…