வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக 10 மரங்கள் நடப்படும்- முதலமைச்சர் பதில்..
தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது . முதல் நாள் கூட்டம் தொடங்கிய போது மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் எம்,எல்,ஏ கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் , நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வன விலங்குகள் உள்ளதால் இடத்தை மாற்ற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்கள் எளிய முறையில் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காகவே நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைக்க உள்ளதாகவும் , மேலும் விதிகளின் அடிப்படையில் அங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்படும் என கூறினார்.