இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.!
இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து, 60 கி.மீ தொலைவில் இந்நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
தற்போது, இந்த ஏரியின் நீர்மட்டம் 35 அடி கொண்டுள்ள இந்த ஏரி 33 அடி ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட உள்ள நிலையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.