உயிரிழந்த பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குறித்து நாம் அறியாத 10 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரை உலகில் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்றிருப்பதாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்பு உடல் நிலையில் மிகவும் பின்னடைவை சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது உடல்நிலை மீண்டும் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருந்ததால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், நேற்று இவர் இவ்வுலகத்தை விட்டு உயிர் துறந்து உள்ளார். இந்நிலையில் இவர் மறைந்து இருந்தாலும் இவரது அழியாத பாடல்களும் அட்டகாசமான குரலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்த வண்ணம்தான் உள்ளது.
அவரது வாழ்க்கையில் அவரைப் பற்றி தெரியாத 10 விஷயங்களைப் பற்றி நாம் இன்று பார்ப்போம். முதலில் இவர் ஒரு பொறியாளராக அரசாங்க வேலை தேட ஆரம்பித்துள்ளார், இவருக்கு இசை கற்பதில் ஆர்வம் இருந்தாலும் பாரம்பரிய இசைக்கான பயிற்சியை இவர் பெறவில்லை. கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கமலஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களின் பின்னணி குரலாக இவர் பணியாற்றியுள்ளார். மேலும் இளையராஜாவின் ஒத்துழைப்புடன் தென்னிந்தியாவில் உள்ள முதல் ஆண் பின்னணிப் பாடகராக தனது தடயத்தை பதித்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர் படங்களில் நடித்துள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த தெலுங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பென் கிங்ஸ்லி அவர்களுக்காக ஒரு டப்பிங் செய்துள்ளார். மேலும் இந்தியில் அவரது முதல் பாடல் ஆகிய தேரே மேரே பீச் எனும் பாடல் பாடப்பட்ட படம் தேசிய திரைப்பட விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. சல்மான்கான் குரலாக மைனே பியார் கியா மற்றும் லவ் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் எனும் ஷாருக்கானின் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் களமிறங்கிய படத்தின் தலைப்பு பாடலை இவர் பாடியுள்ளார்.
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…