அதிகாரிகளின் அதிரடி சோதனை..! 10 ஷவர்மா கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம்…!

Default Image

திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர்.

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும், இந்த சோதனையில், 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்