10 ரூபாய் நாணயங்களை மொத்தமாக கொடுத்து பைக் வாங்கிய தமிழக இளைஞர்.! காரணம் இதுதான்…
ஓசூரில் ராஜீவ் எனும் இளைஞர் டிவிஎஸ் கம்பெனி உயர் ரக பைக்கை 2.8 லட்சம் மதிப்பிற்கு 10 ரூபாய் நாணயங்களாக மொத்தமாக கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்திய அரசு தான் அனைத்து நாணயம் மற்றும் ரூபாய் தாள்களை அச்சிட்டு, தயாரித்து புழக்கத்தில் விடுகிறது. இருந்தும் மக்கள் மத்தியில், 10 ரூபாய் நாணயங்கள் மீதான சிறிய அலர்ஜி இருந்து கொண்டு தான் இருக்கிறது. சில கடைக்காரர்கள் கூட 10 ரூபாய் நாணயம் என்றால் வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர்.
இதனை குறிப்பிட்டு, தமிழகம், ஓசூரை சேர்ந்த ராஜீவ் எனும் இளைஞர், மக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயம் மீதான விழிப்புணர்வை கொண்டு செல்லும் வகையில், நூதன ஐடியாவை கையாண்டுள்ளார்.
அதாவது, அவர் டிவிஎஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்றை வாங்க சென்றுள்ளர். அதன் விலை 2.8 லட்சம் ஆகும். அதற்கான முழு தொகையையும் 10 ரூபாய் நாணயமாக கொடுத்துள்ளார். அதனை எண்ணி பெற்றுக்கொண்டு, பைக்கை அவருக்கு நிறுவனம் வழங்கியுள்ளது.
2.8 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்த இந்த இளைஞரின் செயல் தமிழகம் முழுவதும் வெகு வைரலாக பரவி வருகிறது.