10% இட ஒதுக்கீடு – மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் கோரிக்கை!
10% இட இஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எதிர்ப்பு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழக அரசு இதனை மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அணைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், 10% இட இஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்னுடைய ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் இல்லை, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில், ஓபிஎஸ் மாற்று கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது அதிமுக.
10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக குரல் கொடுக்க வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய நிலையில், ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து கூறாமல் மவுனமாக உள்ளார். தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது பற்று விமர்சனம் எழுந்தது.
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நிலைப்பாட்டுக்கு எதிராக அதிமுக நடப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், 10% இட ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எவ்வித கருத்தும் கூறாமல் மவுனம் காத்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.