மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு – மத்திய அரசு பதில் மனு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யதர்ஷினி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், புதுச்சேரி மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு தந்தால், நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போக செய்யும் என மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 7.5% இட ஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பின்னர் திவ்யதர்ஷினி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நீதிபதி புகழேந்தி 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

13 mins ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

31 mins ago

பெட்டிக்கடை தேன் மிட்டாய் இனி வீட்டிலே செய்யலாம்..!

சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

4 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

4 hours ago

“2026 தேர்தலில் திமுக கூட்டணி தான்., ” திருமாவளவன் திட்டவட்டம்.!

திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…

4 hours ago