10% இடஒதுக்கீடு:எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப்பிரிவினருக்கு 10% கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்று குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக முதன்மைச் செயலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.